Friday, 28 July 2017


Online -மூலம்  டிக்கெட் பெறுவது எப்படி ?

                                                    













ரெயில்களுக்கு இணையாக குளிர்சாதன வசதி, படுக்கை வசதி போன்றவற்றுடன் ஆம்னி (தனியார்) பஸ்கள் இயங்குகின்றன. ரெயில்களில் டிக்கெட் எடுக்க கடும் போட்டி நிலவுவதால், அதிக வசதிகள் கொண்ட ஆம்னி பஸ்களில் பயணம் செய்ய பலர் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ஆம்னி பஸ்கள் பைபாஸ் சாலைகளில் பயணம் செய்வதால் குறிப்பிட்ட நேரத்தில் ஊர்களுக்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கை பயணிகளில் காணப்படுகிறது. இதனால் ஆம்னி பஸ்களில் சொகுசு பயணத்திற்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஆம்னி பஸ்களில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்க ஒவ்வொரு பஸ் கம்பெனியாக ஏறி இறங்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை. ரெயில் டிக்கெட்டுகள் எடுக்க ஆன்லைன் வசதி இருப்பது போல ஆம்னி பஸ் டிக்கெட்டுகளையும் இணைய தளம் மூலம் ஆன்லைன் வசதியை பயன்படுத்தி எடுக்கலாம். இதற்காக ரெட் பஸ் ,  போன்ற இhttps://www.redbus.in/ணைய தளங்கள் உள்ளன. இது தவிர முன்னணி ஆம்னி பஸ் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயர்களிலும் இணைய தளங்கள் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை அளிக்கின்றன. தமிழக அரசு விரைவு போக்குவரத்து சார்பிலும் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இதற்கான இணைய முகவரி http://www.tnstc.in/TNSTCOnline/

மேலும் சில பஸ் நிறுவனங்கள் காகிதத்தை மிச்சப்படுத்தும் வகையில் மொபைல் டிக்கெட் என்ற புதிய வசதியையும் அறிமுகம் செய்துள்ளனர். இதன்படி நாம் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்யும் போது அது தொடர்பான விவரங்கள் நமது மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படும். இந்த குறுந்தகவலை டிக்கெட் ஆக பயன்படுத்திக்கொள்ளலாம். பஸ்சில் பயணம் செய்யும் போது இந்த குறுந்தகவலை காட்டினால் போதும். இந்த வசதி மூலம் டிக்கெட் பிரிண்ட் எடுக்க காகிதம் செலவு செய்வதை தடுக்க முடியும். இது சுற்றுச்சூழலுக்கும் ஏற்ற வசதியாகும்.



டிக்கெட் பெறுவதில் மேலும் ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள வீடீயோவை பார்த்துத்தெரிந்து கொள்ளுங்கள்  .⇓⇓⇓⇓


How to Bus Ticket Booking for Online in Tamil Nadu 2017


                 





How to  Flight Ticket Booking for Online in Tamil Nadu 2017


                        



How to Train Ticket Booking for Online in Tamil Nadu 2017


                     
                           



How to Movie  Ticket Booking for Online in Tamil Nadu 2017


                           
       

No comments:

Post a Comment